இலங்கையின் கடன்நிலைத்தன்மைக்கு தொடர்ந்து ஆதரவு: சீனா உறுதி
#SriLanka
#China
Mayoorikka
1 year ago
இலங்கையின் பொருளாதார சமூக அபிவிருத்திக்கும் கடன்நிலைத்தன்மைக்கும் தொடர்ந்து ஆதரவளிக்கப்போவதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கும் சீனாவின் எக்சிம் வங்கிக்கும் சீனாவின் அபிவிருத்தி வங்கிக்கும் இடையில் இறுதி உடன்பாட்டை எட்டும் விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சீனா தன்னால் முடிந்தளவிற்கு இலங்கையின் சமூகபொருளாதார அபிவிருத்திக்கு தனது ஆதரவை வழங்கிவருகின்றது என தெரிவித்துள்ள அவர் இலங்கையின் கடன்பேண்தகுதன்மைக்கு ஆதரவளிப்பதற்காக உரிய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடன் இணைந்து செயற்பட தயார் என குறிப்பிட்டுள்ளார்.