யாழில் அதிகாலை இடம்பெற்ற பயங்கரம் : அடித்தே கொலை செய்யப்பட்ட இளைஞர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இளைஞன் ஒருவர் இன்று (20.06) அதிகாலை காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 22 வயதான அமல்ராஜ் என்ற இளைஞனே கொலைசெய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று இரவு மது போதையில் வாய்தர்க்கம் இடம் பெற்றதாகவும் அதன் பின்னர் குறித்த இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் குற்றவாளிகள் என சந்தேகிப்படும் இருவரும் அப்பகுதியில் இருந்து தலைமறைவாகியுள்ளதுடன், அவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுந்தீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.