பிரிபுன் தேசாய்க் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

15 வருடங்களில் நாட்டின் அபிவிருத்திக்காக பிரிபுன் தேசாய்க் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட மூலோபாய அபிவிருத்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (19.06) கைச்சாத்திட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையின் வளர்ச்சியில் முன்னுதாரண மாற்றம் 2025" என்று தலைப்பிடப்பட்டது. இந்நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள், சிவில் மற்றும் வெகுஜன அமைப்பு பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு உரையாற்றிய மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர, "நாட்டின் எதிர்காலம் பற்றி மவ்பிம ஜனதா கட்சிக்கு நன்றாகவே தெரியும்.
அதனால்தான் நாங்கள் வந்து இலங்கையின் அரசியலின் கதை மாற்றப்பட வேண்டும் என்று கூறினோம்” எனத் தெரிவித்துள்ளார்.



