யாழ்ப்பாணம் - நீர்வேலி பகுதியில் 17 வயதான இளைஞர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

யாழ்ப்பாணம், நீர்வேலி பகுதியில் விபத்தில் சிக்கிய 17 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி, வில்லுமதவடிக்கு அண்மையான பகுதியில் நேற்று (18.06) இரவு 10 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கைதடிப் பகுதியில் மின்னொளியில் இடம் பெற்ற கரப்பந்தாட்ட போட்டியை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிய இளைஞன், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானார்.
இதில் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த கலைப்பிரியன் (17) என்பவரே உயிரிழந்துள்ளார் .
இதேவேளை சாரதி அனுமதி பத்திரமின்றி வாகனங்களை செலுத்த இவர்களுக்கு மோட்டார் சைக்கிளை இரவலுக்கு கொடுத்தவர்கள் மீதும் சமூகவலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளன.



