வவுனியாவில் நிலநடுக்கம் பதிவு : அச்சத்தில் மக்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
வவுனியா, மேடவாச்சி உள்ளிட்ட பிரதேசங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் வலிமை ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
பல்லகெலே, மஹகனதரவ மற்றும் ஹக்மன ஆகிய நிலநடுக்க மையங்களில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.