கிளிநொச்சியில் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று (18.06) காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.
புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27 வயதுடைய சம்சுதீன் என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தில் அடிகாயங்களும் காணப்படுவதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மரணம் தொடர்பாக நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிசார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.