முல்லைத்தீவு விபத்தில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தையன்கட்டுப் பகுதியில் கடந்த 10.06.2024 அன்று உந்துருளி விபத்தில் காயமடைந்த 27 வயதுடைய இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று (17.06) உயிரிழந்துள்ளார்.
வவுனியாவினை பிறப்பிடமாக கொண்டு முள்ளியவளையில் வசிந்துவந்த 27 அகவையுடைய சிறீஸ்கந்தராசா அரவிந்தன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தினை ஏற்படுத்திய 17 வயதுடைய இளைஞனும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பிய நிலையில் ஒட்டுசுட்டான் பொலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



