திருமணம் நடந்து நான்கு நாட்களின் பின்னர் மணப்பெண்ணைக் கடத்திய கும்பல்!

#SriLanka #Anuradapura
Mayoorikka
1 year ago
திருமணம் நடந்து நான்கு நாட்களின் பின்னர் மணப்பெண்ணைக் கடத்திய கும்பல்!

அனுராதபுரம் - தம்புத்தேகம பிரதேசத்தில் திருமணம் நடந்து 4 நாட்களின் பின் மணப் பெண் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 20 வயதான பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று கடத்தியுள்ளதாக பொலிஸாரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி எனவும் தெரிய வந்துள்ளது. 

 நேற்று முன்தினம் காலை குறித்த பெண் முற்றத்தை துப்பரவு செய்து கொண்டிருந்த போது கும்பல் ஒன்றினால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டுள்ளார்.

 பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்த போதிலும் தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வடமேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த கித்சிறி தெரிவித்துள்ளார். கடத்தல்காரர்கள் மூவரையும் கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 குறித்த பெண் கடத்தப்பட்ட போது கணவன் வீட்டில் இல்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடத்தப்பட்ட மணப்பெண் குறித்து நேற்று மாலை வரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!