இலங்கை முழுவதும் நடந்த சுற்றிவளைப்புகளில் பெண்கள் உட்பட 761 பேர் கைது
#SriLanka
#Arrest
#Women
#island
#drugs
#search
Prasu
1 year ago

நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று 762 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அந்தச் சுற்றிவளைப்புகளில் 742 ஆண்களும் 19 பெண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 18 சந்தேக நபர்களை தடுத்து வைக்க உத்தரவிடப்படவுள்ளதுடன், ஒரு சந்தேக நபர் சொத்து விசாரணைக்காகவும், 10 சந்தேகநபர்கள் புனர்வாழ்விற்காகவும் அனுப்பப்படவுள்ளனர்.
இந்த நடவடிக்கையில், மேல் மாகாணத்தில் மாத்திரம் 536 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கஞ்சா, ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.



