சம்பள பிரச்சினை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சம்பள பிரச்சினை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல்!

சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இன்று (18.06) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த குழு தெரிவித்துள்ளது.  

சம்பளப் பிரச்சினைக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் 48ஆவது நாளாக இன்றும் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதன் இணைத் தலைவர்  தம்மிக்க பிரியந்த தெரிவித்தார்.  

இந்தப் பிரச்சினைக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய தீர்வை வழங்காவிடின் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக  தம்மிக்க பிரியந்த குறிப்பிட்டுள்ளார். 

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த் இவ்வாறான கருத்தை வெளியிட்டார்.  

“பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு காண உடன்பாடு ஏற்பட்டது. கல்வி சாரா ஊழியர்களின் கல்வி கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டதை அடுத்து இரண்டாவது கோரிக்கை வந்தது. பணமும் ஒதுக்கப்படவில்லை. அப்படியானால், UGC மீதம் உள்ள பணத்தில் அதைச் செலுத்த முயற்சித்தோம்.  அவர்கள் வேலைக்கு வந்ததும் சம்பளம் தருவதாக கூறியுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!