சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் பதவி நீட்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் இன்று!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
அரசியலமைப்பு பேரவை அதன் தலைவரும் சபாநாயகருமான மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (18.06) கூடவுள்ளது.
இதன்போது சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்பு தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , சஞ்சய் ராஜரத்தினத்திற்கு 06 மாத சேவை நீடிப்புக்காக பரிந்துரைத்துள்ளதால், அரசியலமைப்புச் சபையின் அங்கீகாரத்தை இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் ஒத்திவைக்க வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும், இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.