மக்களுக்கு உதவி செய்யும் செயற்திட்டத்தை நிறுத்தினார் தியாகி ஐயா!

50 வருட காலமாக தனது சொந்த உழைப்பில் ஏழை எளியவர்களுக்கு வாரிய வழங்கிய வந்த TCT அறக்கட்டளை தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் உதவி வழங்கும் செயற்திட்டங்களை நிறுத்தியுள்ளதாக எமது ஊடகத்திற்கு பிரத்தியேகமாக தெரிவித்துள்ளார்.
உதவிகோரும் யாரும் தன்னிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசியின் ஊடாகவோ தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் அவரிடம் உதவிகோரி நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், மற்றும் பிரமுகர்கள் வந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையிலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதுவரை காலமும் மக்களுக்கு சேவை செய்ய கொடுத்த சந்தர்ப்பத்திற்காக மக்களுக்கும் இயலாதவர்களுக்கும் நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
Lanka4 ஊடகம் தியாகி ஐயாவுக்கு இவ்வளவு காலமும் செய்த சேவையை பாராட்டி உலக கொடை வள்ளல் என்ற பட்டத்தை சூட்டி மகிழ்கிறது.
“நன் வினை செய் நாவார மக்கள் வாழ்த்த, பின் வினை எதிர் பார்த்து”



