போர்கால அமைச்சரவையை கலைத்தார் இஸ்ரேல் பிரதமர்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 உறுப்பினர்களைக் கொண்ட போர்காலஅமைச்சரவையை கலைத்துள்ளார்.
அந்த அமைச்சரவையில் முக்கிய பிரமுகரான பென்னி கிராண்ட்ஸ் கடந்த வாரம் வெளியேறியதை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. போருக்குப் பிறகு காசா பகுதி தொடர்பான கருத்து மோதல் காரணமாக இது ஏற்பட்டது.
இதேவேளை, கடந்த வார இறுதியில் தெற்கு காஸா பகுதியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 8 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம் முதல் இஸ்ரேல் ராணுவம் சந்தித்த மிக மோசமான தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே