11 மாத குழந்தைக்கு எமனாக வந்த தேங்காய்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கலஹா, நாரங்கின்ன பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துரதிஷ்டவசமாக 11 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தை சிறுமியை பக்கத்து வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டு திரும்பி வரும் போது வீட்டின் முன் இருந்த தென்னை மரத்தின் காய்ந்த பழம் சிறுமியின் தலையில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த சிறுமி தெல்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு சிறுமி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



