கொழும்பு ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற விபத்து - நீர் விநியோகம் தாமதமாகலாம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கொழும்பு ஹைலெவல் வீதியில் இடம்பெற்ற விபத்து - நீர் விநியோகம் தாமதமாகலாம்!

கொழும்பு ஹைலெவல் வீதியின் கொடகம பகுதியில் இன்று (17.06) அதிகாலை லபுகம நீர்த்தேக்கத்தில் இருந்து கொழும்புக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பெரிய குழாயில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி மோதியதில் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 

நீர் குழாயில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதால் பாரிய நீர் தேங்கி வீணாகி வருவதுடன் குறித்த இடத்தில் உள்ள மின்கம்பமும் உடைந்து வீதியில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் சிக்கிய கார் சாரதி உட்பட இருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.  

குறித்த கார் அதிவேகமாக வந்து வீதியை விட்டு விலகி தண்ணீர் குழாயில் மோதி கவிழ்ந்தது. இந்த நீர் குழாயில் ஏற்பட்ட பாரிய சேதம் காரணமாக கொழும்புக்கான நீர் விநியோகம் சிறிது காலம் தாமதமாகலாம் என நீர் வழங்கல் சபையின் மஹரகம வலய அலுவலகம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!