வெள்ளத்தில் மூழ்கிய சீன நகரங்கள் : மக்களுக்கும் எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
வெள்ளத்தில் மூழ்கிய சீன நகரங்கள் : மக்களுக்கும் எச்சரிக்கை!

தென் சீனாவின் பல பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சீனாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் கடுமையான மழையுடன் கூடிய மோசமான வானிலை பதிவாகியுள்ளது.

அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால், வரும் நாட்களில் மழை தொடரும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் சீனாவின் சில பகுதிகள் ஏற்கனவே வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் புஜியன் மற்றும் குவாங்சி நகரங்கள் வெள்ளம் உள்ளிட்ட வானிலை தொடர்பான பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும் அந்த பகுதியில் வெள்ளம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல மீட்புப் பணியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தெற்கு சீனாவின் பல மாகாணங்களுக்கு நான்காம் நிலை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4