தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தமிழ் பொது வேட்பாளரை  நிறுத்துவது தொடர்பில் கிளிநொச்சியில் கலந்துரையாடல்!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான காலத்தின் தேவை குறித்த கலந்துரையாடல் ஒன்று இன்று (16.06) கிளிநொச்சியில் இடம்பெற்றது.  

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான காலத்தின் தேவை குறித்து தமிழர் பொதுக் கட்டமைப்பு கிளிநொச்சி மாவட்ட சிவில் சமூகத்தினரை அழைத்து கலந்துரையாடினர்.  

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தற்போது நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பேராசிரியர் ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன், அரசியல் ஆய்வாளர் சி.அ. ஜோதிலிங்கம், மாவட்டத்தின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.  

இதன் போது பொதுவேட்பாளர் தொடர்பாக பொது அமைப்புக்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களும் தமது கருத்தினை தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!