கொஹுவல ஊடாக பயணிக்கும் சாரதிகளுக்கு விசேட அறிவுறுத்தல்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

கொஹுவல சந்தியில் மேம்பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள நிலையில் இன்று (15) முதல் அந்த வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் வாகன போக்குவரத்து 02 மாதங்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.நிஹால் தல்துவ தெரிவித்தார்.
“கொழும்பில் இருந்து பிலியந்தலை செல்லும் சாலையில் கொஹுவளை சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தின் திருத்தப் பணிகள் ஆரம்பமாகின்றன.
எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வரை பணிகள் மேற்கொள்ளப்படும். எனவே அந்தச் சந்தியைச் சுற்றி போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படக்கூடும். எனவே மாற்று வழிகளைப் பயன்படுத்தவும் என பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



