அமெரிக்கா-உக்ரைன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம்

#America #Ukraine #Defense #Agreement
Prasu
2 years ago
அமெரிக்கா-உக்ரைன் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம்

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய முன்னேறிய நாடுகள் கொண்ட ஜி-7 அமைப்பின் உச்சிமாநாடு இத்தாலியில் நேற்று தொடங்கியது. 

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார். நேற்று அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்குமிடையே 10 ஆண்டுகளுக்கு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த 10 ஆண்டுகளுக்கு உக்ரைனுக்கு பல்வேறு வகையில் ராணுவ உதவி மற்றும் ராணுவ பயிற்சியை அமெரிக்கா வழங்கும்.

 ரஷியாவின் படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். அத்துடன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கான முயற்சியில் தனது நாட்டிற்கு இது ஒரு பாலமாக செயல்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4