வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

#SriLanka #Vavuniya #Protest #Staff
Lanka4
1 year ago
வவுனியா பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்கள் இன்று பம்பைமடுவில் உள்ள பல்கலைக்கழகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தமது சம்பள முரண்பாட்டை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என வலியுறுத்தி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தனர்.

images/content-image/2024/06/1718345484.jpg

இதன்போது பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்த்தி வை, தமக்கு வழங்குவதாக உறுதிப்படுத்திய கொடுப்பனவை வழங்கு, 25 வீத அதிகரிப்பை உடனடியாக வழங்கு போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்கி இருந்தனர்.

images/content-image/2024/06/1718345502.jpg

சுமார் அரை மணி நேரம் இடம்பெற்ற இந்த கவயீர்ப்புப் போராட்டத்தினை அடுத்து கல்வி சாரா ஊழியர்கள் தங்களுக்கு இடையிலான கூட்டம் ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!