தேசிய புலனாய்வு பிரிவின் தகவலிற்க்கமைவாக மந்திகையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது
#SriLanka
Lanka4
1 year ago

அரச புலனாய்வு சேவையின் தகவலுக்கமைய கேரள கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கற்கோவளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் 02kg 300g கேரள கஞ்சாவுடன் மந்திகை பகுதியில் வைத்து நேற்றைய தினம் நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீண்ட காலமாக கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த நபர் தொடர்பில் அரச புலனாய்வு பிரிவினர்க்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த அரச புலனாய்வு பிரிவினர் நேற்றைய தினம் விற்பனை நோக்கத்திற்க்காக கஞ்சாவை கொண்டு செல்லும்போது குறித்த கஞ்சாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் நெல்லியடி பொலீஸார் இன்று வெள்ளிக்கிழமை பருத்திதுறை நீதி மன்றில் முற்படுத்தப்படுத்தவுள்ளார்.



