மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல நடிகர்

#Death #Actor #TamilCinema #Kollywood
Prasu
10 months ago
மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த பிரபல நடிகர்

தெகிடி, மேயாத மான், லிப்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த பிரதீப் கே.விஜயன் சென்னை பாலவாக்கம் சங்கராபுரம் முதல் தெருவில் வசித்து வந்தார்.

நண்பர்கள் அவரை தொடர்பு கொண்டபோது அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. 

சந்தேகம் அடைந்த நண்பர்கள் இன்று போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாருடன் சென்று பிரதீப் கே.விஜயன் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது குளியல் அறையில் தலைக்குப்புற கீழே விழுந்தபடி அவர் இறந்து கிடந்துள்ளார். 

அவர் தலையில் காயமும் ஏற்பட்டுள்ளது. பிரதீப் கே.விஜயன் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரதீப் கே.விஜயன் மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 திருமணம் செய்யாமல் தனியாக வாழ்ந்த பிரதீப் கே.விஜயனுக்கு அடிக்கடி மூச்சுத்திணறல், தலை சுற்றல் ஏற்படும் என கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!