04 வருடங்களின் பின் பிரமாண்டமாக இடம்பெறும் இலங்கை திருவிழா!

04 வருடங்களின் பின்னர் ஜப்பானில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட வருடாந்த "இலங்கை விழா" இவ்வருடம் பிரமாண்டமான முறையில் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் வாழும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் வருடத்திற்கு ஒருமுறை சந்திக்கும் இலங்கையின் மிகப் பெரிய நிகழ்வு "இலங்கை திருவிழா" என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி, இலங்கையின் கலாச்சார பன்முகத்தன்மையின் தொடர் நிகழ்வுகள் ஜூன் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை டோக்கியோ யோயோகி பூங்காவில் நடைபெறவுள்ளது.
இலங்கையின் பாரம்பரிய நடனங்கள், இசை மற்றும் பல்வேறு இலங்கை உணவு மற்றும் பானங்களை ருசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பூரண ஆதரவின் கீழ், ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம், இலங்கை அறிஞர்கள் சங்கம், இலங்கை சங்கம், இலங்கை மாணவர் சங்கம் போன்ற பல அமைப்புகள் இதற்குப் பங்களிப்புச் செய்கின்றன.
கிட்டத்தட்ட 4 இலட்சம் இலங்கையர்கள் தற்போது ஜப்பானில் வசித்து வருவதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.



