நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கையர்கள்! காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

#SriLanka #Tamil Nadu #Fisherman
Mayoorikka
1 year ago
நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கையர்கள்! காப்பாற்றிய தமிழக மீனவர்கள்

தமிழகத்தின் - வேதாரண்யம் அருகே படகு பழுதாகி நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரை தமிழக மீனவர்கள் மீட்டனர்.

 இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் அனலைத்தீவு பகுதியைச் சேர்ந்த மைக்கேல் பெர்னாண்டோ விஜயகுமார் ஆகிய இரு மீனவர்கள் கடந்த 10ம் தேதி மாலை பைபர் படகில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.

 இவர்கள் வந்த படகு எஞ்சின் பழுதானால் திசை மாறி நாகை மாவட்டம் வேதாரணியம் நகராட்சிக்குட்பட்ட ஆற்காடுத்துறை கடற் பகுதிக்கு வந்தனர் .

images/content-image/2024/06/1718257170.jpg

 இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக நடுக்கடலில் உயிருக்கு போராடிய இலங்கை மீனவர்கள் இருவரையும் அப்பகுதி வழியாக மீன் பிடிக்கச் சென்ற ஆற்காட்டுத்துறை மீனவர்கள் தத்தளித்த இலங்கை மீனவர்களை மீட்டு கரை சேர்த்தனர் . 

 இருவரையும் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

images/content-image/2024/06/1718257187.jpg

 இரண்டு நாட்களாக கடல் தண்ணீர் குடித்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மீட்கப்பட்ட இருவரும் கடத்தல் காரர்களா? அல்லது மீன் பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களா ?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!