லெபனான் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்

#Death #Attack #Israel #Commander #Lebanon #Hezbollah
Prasu
2 years ago
லெபனான் மீது நடந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி மரணம்

பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. 

இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. 

மேலும், 120 பேர் இன்னும் பணய கைதிகளாக உள்ளதாகவும், அதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

அதேவேளை, இந்த போரில் லெபனானில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருகிறது.

ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

தெற்கு லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி அபுதலிப் உயிரிழந்தார். அவருடன் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4