பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று காணப்படுகிறதா : பெண்களே உஷார்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று காணப்படுகிறதா : பெண்களே உஷார்!


நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் இருக்கும் பெண்களுக்கு, அடிக்கடி வஜைனல் ஈஸ்ட் இன்பெக்ஷன் என்று கூறப்படும் பிறப்புறுப்பில் பூஞ்சை தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகமாக இருக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது உடல் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் குறைந்து இது போன்ற தொற்றுகளை தானாகவே சரிசெய்யும் ஆற்றல் குறைந்து விடும்.

நீரிழிவு நோய் என்பது சக்கரை வியாதி என்று அறியப்பட்ட காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே இந்த நோய் வரும் என்று நிலை இருந்தது. ஆனால் தற்பொழுது ஒரு குடும்பத்தில் குறைந்தப்பட்சம் ஒருவருக்காவது நீரிழிவு பாதிப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல், நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு சிலருக்கு மட்டும் தான் நீரிழிவு நோய் ஏற்படும் என்ற எந்த வரையறையும் இல்லாமல், குழந்தைகள் பெண்கள் என்று அனைவருமே சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக உடல் பருமன் கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறித்தனமான வாழ்க்கை ஆகியவற்றால் ஏற்படும் உடல் பருமனால் நீரிழிவு நோயால் பல பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

images/content-image/1718200705.jpg

பொதுவாக நீரிழிவு நோய் ஏற்படும் பொழுது அதிகமான தாகம், அதிகமான பசி, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் போன்ற உணர்வு உள்ளிட்ட ஒரு சில கிளாசிக் அறிகுறிகள் தென்படும். ஆனால் பெண்களை பொறுத்தவரை இதை தவிர்த்து வேறு சில அறிகுறிகளும் இருக்கின்றன. பெண்களுக்கு பின்வரும் பிரச்சனைகள் அல்லது அறிகுறிகள் அடிக்கடி தென்பட்டால் அவர்கள் உடலில் ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகமாக இருக்கிறது; உடனடியாக பரிசோதனை செய்து அதற்குரிய மருந்துகள் அல்லது உரிய மருத்துவத்தை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

மாதவிடாய் சுழற்சி ஒழுங்கில்லை என்றால், அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதற்கு நீரிழிவும் ஒரு காரணமாக இருக்கலாம். நீரிழிவு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிப்பதால் இது மாதவிடாய் சுழற்சியில் பலவித பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக டைப் 1 நீரிழிவு நோய் என்பது பெண்கள் முதல் முதலாகப் பூப்பெய்தும் போது அவர்களை பாதிக்க கூடாது, டைப் 1 நீரிழிவு இருக்கும் பெண்களுக்கு இயல்பாகவே மாதவிடாய் மிகவும் தாமதமாகும். ஆனால் மாதவிடாய் சுழற்சி சீராக இல்லாதவர்களுக்கு நீரிழிவு இருக்கிறது என்று அர்த்தம் கிடையாது.