மூத்த போராளி விநாயகம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பிரான்சில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி விநாயகம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு பிரான்சில் இடம்பெறவுள்ளது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வு பிரிவில் இருந்த மூத்த போராளி விநாயகம் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக 04.06.2024 அன்று பிரான்சில் உயிரிழந்தார்.
இவரது இறுதிக்கு கிரியைகள் 20.06.2024 வியாழக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. 30 route de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் மூத்த போராளி விநாயகம் அவர்களின் புகழுடல் காலை 10.00 மணியிலிருந்து 16.00 மணிவரை வணக்க நிகழ்விற்காக வைக்கப்பட்டு, பின்னர் 16A Avenue Jeans jaures, 93500 Pantin இல் இறுதிநிகழ்வு இடம்பெறும்.
தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிகப்பெரும் சாதனை படைத்த மூத்த தளபதி விநாயகம் அவர்கள் சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கி உலகத்தையே எமது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர். அத்துடன் சிறீலங்கா புலனாய்வுத்துறையின் அசைவின் துடிப்பறிந்து பல்வேறு தாக்குதல்களை நெறிப்படுத்தி, வெற்றிக்கு வழி சமைத்தவர்.
தான் நேசித்த மண் விடுதலை பெறவேண்டும், தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழ வேண்டுமென்று சதா சிந்தித்து செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது இறப்பிற்கு பல்வேறுபட்ட தமிழ்த் தேசியப் பற்றாளர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



