70 லட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் 24 வயது பெண் கைது
#SriLanka
#Arrest
#drugs
#Girl
Prasu
1 year ago

70 லட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 24 வயதுடைய யுவதியொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கொனஹேன முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலகத்துரே பிரதேசத்தில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அங்கு சந்தேகநபரிடம் இருந்து 28 கிலோ 310 கிராம் கேரள கஞ்சா மற்றும் 10 கிராம் 10 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
சந்தேகநபர் பெண்ணும் போதைப்பொருளும் மேலதிக விசாரணைகளுக்காக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.



