தேர்தலை ஒத்திவைக்க முடியாது! மகிந்த எச்சரிக்கை

#SriLanka #Election
Mayoorikka
1 year ago
தேர்தலை ஒத்திவைக்க முடியாது!  மகிந்த எச்சரிக்கை

அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது எனவும், அவ்வாறான செயலை செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் முட்டாள்தனமான முடிவு எனவும், முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 பதுளையில் நேற்று இடம்பெற்ற கட்சி கூட்டமொன்றில் இதனை கூறியுள்ளார். “இப்போது நாட்டு மக்கள் மொட்டுக்கட்சி மீது பெரும் நம்பிக்கையை வைத்துள்ளனர். எமது கட்சியின் சில உறுப்பினர்கள் வெளியேரினாலும் எதனையும் இழக்கவில்லை.

 அதை விட இன்று நாம் பலமாக இருக்கின்றோம். தேர்தலை நடத்த வேண்டும். அரசியலமைப்புக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஐக்கிய தேசிய கட்சி அவ்வாறு செய்யும் என்று நான் நினைக்கவில்லை. 

அது ஒரு முட்டாள்தனமான விடயம். ஐக்கிய தேசியக் கட்சி அவ்வாறானதொரு செயலைச் செய்தால் அது ஐக்கிய தேசியக் கட்சியின் தனிப்பட்ட முடிவாகும். ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாங்கள் எதுவும் கூறமாட்டோம். 

சரியான நேரத்தில் சொல்வோம். மொட்டுவின் வெற்றிக்காக மக்கள் காத்திருக்கின்றனர். வேறு கட்சிகளுக்காக அல்ல. என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!