ஜப்பானில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 மாணவர்கள்

#School #Student #Hospital #Japan
Prasu
2 years ago
ஜப்பானில் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 30 மாணவர்கள்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். 

இந்த பள்ளிக்கூடத்தில் நேற்று வழக்கம்போல் வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் இடைவேளையின்போது மாணவர்கள் வகுப்பறையில் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒரு மாணவர் தற்செயலாக நண்பர்கள் மீது பெப்பர் ஸ்பிரேவை பயன்படுத்தினார். இதனால் கண் எரிச்சல் ஏற்பட்டு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அலறி துடித்தனர்.

 இதனையடுத்து அந்த மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4