நயன் மற்றும் விக்கியை சந்தித்த நடிகை வரலட்சுமி
                                                        #Actress
                                                        #TamilCinema
                                                        #wedding 
                                                        #Kollywood
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார் , சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி எனும் திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர்.
இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர்.
இதற்கிடையில் வரலட்சுமி சரத்குமாருக்கு மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச் தேவ் உடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து விரைவில் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது. எனவே தனது திருமணத்திற்காக திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்.
 தற்போது தனது முதல் பட இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் அவரது மனைவி நடிகை நயன்தாராவிற்கும் தனது சித்தி ராதிகாவுடன் நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.