பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கும் தபால் ஊழியர்கள்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுப்பு அறிக்கை மற்றும் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், "அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. சுமார் 2,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இல்லை. இதனால், ஊழியர்கள் சேவை செய்ய கடும் முயற்சி எடுக்க வேண்டியுள்ளது.
காலி பணியிடங்கள் இருப்பதால், மக்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.



