விஜயதாச ராஜபக்ஷவிற்கு எதிரான தடை நீட்டிப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகச் செயற்படுவதைத் தடுத்தும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகச் செயற்படுவதற்கும் தடை விதித்து விதிக்கப்பட்ட தடை உத்தரவை மேலும் நீடிப்பதாக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (11.06) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கில் உரிய ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் வழங்குமாறு பிரதிவாதி நீதிமன்றத்திடம் கோரினார்.
அதையடுத்து, இந்த தடை உத்தரவை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான லசந்த அழகியவண்ணவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



