ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் இன்று (11.06) காலை வேன் ஒன்றுடன் பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,
குறித்த விபத்தில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கிச் செல்லும் தனியார் பேருந்தும், ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வேன் ஒன்றுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
அதிவேகமாக பயணித்த வேன் சறுக்கி எதிர்திசையில் பயணித்த தனியார் பஸ்ஸுடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மழை பெய்து வருவதால் அவ்வழியாக வாகனங்களை செலுத்தும் போது அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு கினிகத்தேன பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.



