கோழி இறைச்சிகளை கொள்வனவு செய்யும்போது கவனம் தேவை!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் இராசிங்க தெரிவித்தார்.
இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என .சஞ்சய் இரசிங்க கூறுகிறார்.
வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தப்படுத்தி, பொதி செய்து விற்பனை செய்யும் கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக இது குறித்து விழிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.



