கொசுக்களால் ஏற்படும் கொடிய பற்றீரியாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கொசுக்களால் ஏற்படும்  கொடிய பற்றீரியாவால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண்!

தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பாக்டீரியா தொற்றுக்கு முகங்கொடுத்துள்ளார். 

நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணால்  வலி தாங்க முடியாத நிலையில் அவரை மயக்கத்தில் வைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

74 வயதான கார்மெல் ரோட்ரிக் தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். 

 மெல்போர்னில் வசித்த அவர்களுடன் சில மாதங்கள் தங்கியிருந்த அவள் திடீரென்று நோய்வாய்பட்டுள்ளார்.  கார்மலின் இடது கை வீங்கி நீலமாக இருந்தது, அவளுடைய மகள் தன் தாயை முதலில் குடும்ப மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். எனினும், நிலைமை தீவிரமானதால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்குமாறு குடும்ப மருத்துவர் அறிவுறுத்தியிருந்தார்.  

அவரது உயிரைக் காப்பாற்ற, வலியை ஏற்படுத்திய இடது கையை துண்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது இடது கை துண்டிக்கப்பட்ட பிறகு, மருத்துவ பரிசோதனையில் அவருக்கு அரிதான பாக்டீரியா தொற்று இருப்பது தெரியவந்தது.

 இது தோலுக்கு அடியில் உள்ள செல்கள், சிறிய ரத்த நாளங்கள், கொழுப்பு ஆகியவை அழிந்து, தோல் மற்றும் சதை கரையும் நிலை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆஸ்திரேலிய மருத்துவர்களின் கூற்றுப்படி, கொசுக்கள் மற்றும் விலங்குகளால் பரவும் இந்த பாக்டீரியா நிலை புருலி அல்சர் என்று அழைக்கப்படுகிறது.  

கடந்த சில ஆண்டுகளாக, நாட்டின் பல மாநிலங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்ட கார்மல் உயிருக்கு போராடி மெல்போர்னில் உள்ள சன்ஷைன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  

கையை கழற்றியதால் ஏற்பட்ட கடுமையான வலியை உணராதவாறு மயக்க நிலையில் வைக்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கார்மெல் ரோட்ரிக்வின் சிகிச்சைக்கு $200,000க்கும் அதிகமாக செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதற்கான நிதியொன்று நிறுவப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!