கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி தந்தையும், மகளும் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி தந்தையும், மகளும் பலி!

கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 

கம்பஹா எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

இதில் மோட்டார் சைக்களில் பயணித்த 54 வயதுடைய தந்தையும் 22 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளனர். 

எடேரமுல்லையிலிருந்து வத்தளை நோக்கி பயணித்த மோட்டார் வண்டி பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

விபத்தில் உயிரிழந்த தந்தையும் மகளும் பயகம, கோனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு்ளளனர். இதன் காரணமாக பிரதான பாதையில் இயங்கும் ரயில் தாமதமாகலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!