ஸ்பேஸ் எக்ஸ் நடத்திய ராக்கெட் சோதனை வெற்றி

#ElonMusk #Rocket #Space
Prasu
2 years ago
ஸ்பேஸ் எக்ஸ் நடத்திய ராக்கெட் சோதனை வெற்றி

ஸ்பேஸ் எக்ஸ் 400 அடி (121 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய மற்றும் சக்தி வாய்ந்த ராக்கெட்டை உருவாக்கியுள்ளது. 

இந்த ராக்கெட் இதற்கு முன் மூன்று முறை வானில் செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

மூன்று முறையில் ராக்கெட் செலுத்தப்பட்டதும் வெடித்து சிதறி சோதனை தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து ஏவிய நிலையில் வெற்றிகரமான வானில் சீறிப்பாய்ந்து மீண்டும் பூமிக்கு திரும்பியுள்ளது.

இன்று காலை மெக்சிகோ வளைகுடாவில் இருந்து இந்திய பெருங்கடல் நோக்கி ஏவப்பட்டது. 

ராக்கெட் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் விண்கலத்தின் இருந்து முதல்-நிலை பூஸ்டர் தனியாக பிரிந்து திட்டமிட்டபடி வளைகுடாவில் விழுந்தது. ஸ்டார்ஷிப் விண்கலம் ஆறு ராப்டர் என்ஜின்களுடன் தொடர்ந்து அதன் பயணத்தை தொடர்ந்தது. 

 எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செவ்வாய் மற்றும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4