காசா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 11 பேர் பலி

#Death #Attack #Missile #Israel #Gaza
Prasu
2 years ago
காசா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் 11 பேர் பலி

இஸ்ரேல் காசா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். 

குறிப்பாக ரஃபா மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவும் மற்றும் திங்கட்கிழமை காலையில் மத்திய காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் பெண் ஒருவர், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை நள்ளிரவு புரைஜி முகாம் அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

நுசெய்ரத் முகாமில் தாக்குதப்பட்ட தாக்குதலில் பெண் உள்பட ஏழு பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவித்துள்ளது.

 இதற்கிடையே ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ந்தேதி கடத்தி செல்லப்பட்டதாக கருதப்படும் பிணைக்கைதிகளில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4