யாழ் பெண் ஜனனிக்கு அடித்த அதிர்ஷ்டம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழில் இருந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர்தான் நடிகை ஜனனி.
அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் தளபதி விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
தற்போது அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்த வாய்ப்பை தந்த இயக்குனர் மிக்ஸினுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.