பஸ் கட்டணங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு

#SriLanka #prices #Bus #Fuel
Prasu
1 year ago
பஸ் கட்டணங்கள் குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அறிவிப்பு

டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், டீசல் விலை 307 ரூபாவாக குறைந்ததால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும்.

டீசல் விலை 4 சதவீதம் குறைந்தால் மாத்திரமே பஸ் கட்டணங்களைக் குறைக்க முடியும். ஆனால் இம்முறை டீசல் விலை 2.8 சதவீதமாகவே குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டீசலின் விலை லிட்டருக்கு 16 ரூபாவினால் குறைக்கப்பட்டு 317 ரூபாவாக குறைந்துள்ளது.

 எனவே, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாதென அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!