சிறிகொத்தவை எஸ்ஜேபிக்கு வழங்குமாறு கோரிக்கை!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவை எஸ்ஜேபிக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமகி ஜன பலவேகய (SJB) நேற்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் தேர்தல் முகாமையாளர் சுஜீவ சேனசிங்க, சிறிகொத்தவை உரிமை கோருவதற்கு எஸ்.ஜே.பி.க்கு உரிமை உண்டு.
"நாங்கள் முன்னாள் ஐ.தே.கட்சியினர் என்பதால் சிறிகொத்தவை உரிமை கொண்டாட எங்களுக்கு உரிமை உள்ளது," என்று அவர் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய அவல நிலை குறித்து கவலை வெளியிட்ட அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் தனது மனசாட்சிப்படி செயற்பட்டு சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைப்பார் என நம்புகிறோம். எஞ்சியுள்ள ஐ.தே.கட்சியினரின் நலனுக்காக அவர் அவ்வாறு செய்ய வேண்டும். அவர் சிறிகொத்தவை எங்களிடம் ஒப்படைத்தால் அவரது சில பாவங்கள் மன்னிக்கப்படும்” என்றார்.



