ISIS பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் கைது!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்ததாகவும் அவர்களுக்கு உதவியதாகவும் சந்தேகிக்கப்படும் அத்தியாவசிய சந்தேக நபர் ஒஸ்மான் புஷ்பராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பயங்கரவாத புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு நடவடிக்கையில் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி, சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.



