இலங்கையில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் ஆபத்தில்!
#SriLanka
#School
Mayoorikka
1 year ago

மண்சரிவு அதி அபாய பகுதிகளில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் காணப்படுகின்றன என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்தது.
அடையாளம் காணப்பட்டுள்ள மேற்படி பாடசாலைகள் அமைந்துள்ள பகுதியில் அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவின் பணிப்பாளர் காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், மண்சரிவு அதி அபாய பகுதிகளில் பல்வேறு அரச நிறுவனங்களும் காணப்படுகின்றன அவர் தெரிவித்துள்ளார்.



