03 வருடங்களின் பின் தனது குடும்பத்தை பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
03 வருடங்களின் பின் தனது குடும்பத்தை பார்க்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

வெளிநாட்டில் பணிப்புரிந்த நிலையில்  3 வருடங்களுக்குப் பிறகு வீட்டுக்குச் சென்ற பெண் விபத்தில் சிக்கி துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். 

பசறை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

ஏறக்குறைய 03 வருடங்களாக குவைத்தில் பணிபுரிந்துவிட்டு தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

பெல்மடுல்ல பகுதியில் இவர்கள் பயணித்த முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது குறித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி சுமார் 15 அடி பாறையில் வீழ்ந்துள்ளது. பாலமடுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரில்ஹேன பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர்.   அத்துடன் முச்சக்கரவண்டியில் பயணித்த உயிரிழந்த பெண் உட்பட மூன்று பயணிகளும் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் பெல்மடுல்ல, கஹவத்த மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பலத்த காயமடைந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின்சடலங்கள் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!