தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை இடைநிறுத்த நடவடிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை இடைநிறுத்த நடவடிக்கை!

4 தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கை சைக்கிள் ஓட்டுதல் சம்மேளனம், ரக்பி யூனியன், ஆட்டோமொபைல் சம்மேளனம் மற்றும் வலைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் பதிவு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சம்மந்தப்பட்ட சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களின் மேலதிக பணிகளை முன்னெடுப்பதற்கும், அது தொடர்பான தேர்தலை நடத்துவதற்கும் உரிய அதிகாரியாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!