தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தார் ஜுலி சங்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்தார் ஜுலி சங்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்  ஜூலி சாங், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்துள்ளார். 

நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல்கள் குறித்து கேட்டறிவதற்காக அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்களின் போது ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமைகள் தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் தேர்தல் ஆணையாளரிடம் கேட்டறிந்தார். 

இதேவேளை, அண்மையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தூதுவர்கள், ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் ஆகியோரும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களைச் சந்தித்து எதிர்வரும் தேர்தல் நடைமுறைகள் குறித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!