நாட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளை, கலுபோவில பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பொரலஸ்கமுவ மற்றும் மொரட்டுவை ஆகிய பிரதேசங்களில் உள்ள பல்வேறு வீடுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளன.
இந்நிலையில், இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் திகதி சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று தலைமறைவாக இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளன.
கொள்ளையிடப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



