குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதும்!

#SriLanka #sri lanka tamil news
Dhushanthini K
1 month ago
குடும்ப பிரச்சினை தீர, பணவரவு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதும்!

நம்முடைய வீட்டில் கண் திருஷ்டியின் பாதிப்பு இருந்தால் சண்டை சச்சரவுகள் வரும், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். கண் திருஷ்டி பாதிப்பு ஏற்படாமல் இருக்க கிராமங்களில் கற்றாழை செடியை வீட்டின் முன்பாக கட்டி வைப்பார்கள். 

சிலரோ தொட்டிகளில் வளர்ப்பார்கள். கற்றாழை செடியானது உடல் ஆரோக்கியம், சரும ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பணப்பிரச்சினை, குடும்ப சண்டையை போக்கும் செடியாகவும் உள்ளது. 

கற்றாழை செடியின் அருமை தெரிந்துதான் இன்றைக்கு பலரும் அதனை வீடுகளில் வளர்க்கத் தொடங்கியுள்ளனர். துளசி செடி போல கற்றாழை செடியையும் பலரும் தொட்டிகளில் வளர்க்கின்றனர்.

 வாஸ்துபடி சரியான திசையில் கற்றாழை செடியை வளர்த்தால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். 

கற்றாழை மிகவும் ஆரோக்கியமானது என நம் அனைவருக்கும் தெரியும். அது அதிஷ்டத்தையும் தரக்கூடிய செடி. ஆலோவேரா என்று அழைக்கப்படும் இந்த கற்றாழை செடியை நாம் வீட்டில் நிலை வாசலுக்கு முன்பாக கட்டி வைப்பதன் மூலம் கண் திருஷ்டி ஏற்படாது. எதிர்மறை ஆற்றல் வீட்டிற்குள் நுழையாது. 

குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்டு வரும் சண்டை சச்சரவுகள் நீங்கும். மகிழ்ச்சி அதிகரிக்கும். கிராமங்களில் வீட்டு வேலிகளை சுற்றி கற்றாழை செடியை நட்டு வளர்ப்பார்கள். பாம்பு போன்ற விஷ ஜந்துகள் வீட்டிற்கு நுழையாமல் தடுக்கவே கற்றாழை வளர்த்தனர். 

வீடு தினம் தினம் சண்டை சச்சரவுடன் போர்க்களமாக இருக்கிறதா? கட்டாயம் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். இதன் மூலம் சண்டை நீங்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். 

பண வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கற்றாழை செடியை வளர்க்க வேண்டும். வீட்டு வாசல், பால்கனி எங்கு வேண்டுமானாலும் கற்றாழை செடியை தொட்டியில் வைத்து வளர்க்கலாம். பரிகாரத்திற்காக வளர்க்கும் கற்றாழை செடியை எந்த காரணத்திற்காகவும் வெட்டக்கூடாது. 

நீங்கள் வளர்க்கும் கற்றாழை செடிக்கு தினசரி தண்ணீர் ஊற்ற வேண்டும். அப்படி தண்ணீர் ஊற்றும் போது குல தெய்வத்தை மனதார வேண்டிக்கொள்ள வேண்டும். பணப்பிரச்சினை தீர வேண்டும் என்று வேண்டுங்கள்.

தாமிர பாத்திரம், பித்தளை டம்ளர் உங்கள் வீட்டில் இருந்தால் அதில் சுத்தமான தண்ணீர் எடுத்து சிறிதளவு சோம்பு, 1 ஏலக்காய், ஒரு சிட்டிகை சர்க்கரையை அதில் போட்டு வைக்கவும் இரவு உறங்கும் முன்பாக அதை ரெடி செய்து பூஜை அறையில் வைக்கவும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து விட்டு பூஜை அறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு அந்த தண்ணீரை கொண்டு போய் கற்றாழை செடிக்கு ஊற்ற வேண்டும். 

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்தால் பண வருமானம் அதிகரிக்கும். கடனாக கொடுத்த பணம் வீடு வந்து சேரும். நம்பிக்கையுடன் செய்யுங்கள் நல்லதே நடக்கும்.