தேர்தல் ஆணைக்குழுவை அவசரமாக சந்தித்த அமெரிக்க தூதுவர்!
#SriLanka
#Election Commission
#United States Ambassador to Sri Lanka
Mayoorikka
1 year ago

இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று 28 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், தனது X வலைத்தளத்தில் பதிவொன்றை பதிவேற்றியுள்ளார். “தேர்தலுக்கான திட்டங்கள் மற்றும் வெளிப்படையான செயல்முறையை நிலைநிறுத்துவது குறித்து தேர்தல் ஆணைக்குழுவுடனான சந்திப்பு பாராட்டுக்குரியது.
இலங்கை, அமெரிக்கா மற்றும் பல நாடுகள் இந்த ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதால், ஜனநாயக ஆட்சியின் தூணாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து நாங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம்.” என அவர் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.



